Tuesday, July 12, 2011

திருநள்ளாறு பயணம்..

ரெய்யில் டிக்கெட் online book செஞ்சாலும் பல முறை print out எடுத்துவரும் முன் ஜாக்கரதை முத்தண்ணாக்களை ஏராளம் தொடர்வண்டியில் பார்க்க முடிந்த்து.
இரண்டு சீட் தள்ளி நன்கு முடி வளர்ந்து ஆளும் வளர்ந்து ஒருவன் மற்றும் ஒருத்தி உட்கார்ந்திருந்தார்கள். மடியில் கணினி(மடிகணினி) காதில் இருந்து இரு ஒயர்கள் வழிந்து சென்று அருகில் இருக்கும் தீப்பெட்டி சைஸ் கைபேசியில் முடிந்திருந்த்து. அந்த ஒயர் மூலம் கானம் ஒலித்துக் கொண்டிருந்த்தை அவன் தலை ஆட்டுவதை வைத்து கணிக்க முடிந்த்து.
மயிலாடுதுறையும் மாயவரமும் ஒன்றுதான் என்பது இந்த பயணத்தின் போது தெரிந்த்து. நல்லகாலம் அடுத்தவர் கேட்டு அசடு வழிவதை விட நமக்கு நாமே தெரிந்து அந்த அசடை நாமே வழிய விட்டுக் கொள்வதில் ஒரு தனி த்ரில்தான்.
அந்த தொடர்வண்டி ஆடும் ஆட்டத்தில்.. மஹும்.. அந்த தாலாட்டில் நல்ல உறக்கம் வந்தது. மேல் berth காலியாய் இருந்த்தால் மேலேறி நன்றாக உறங்கிவிட்டேன். மாயவரம் அடைய 1.30 மணியாகும் என்று சொன்னதால் 12.55க்கு கீழ் இறங்கி வந்தேன்.
ரயில் சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் கடந்து மாயவரம் என்கிற மயிலாடுதுறையை அடைந்த நேரம் 2.15 மணி.
இறங்கிய கூட்ட்த்தில் பாதி திருநள்ளாறு அல்லது திருகடையூர் போகும் நபர்கள்தான். மீதியெல்லாம் சொந்த ஊர், பக்கத்து ஊர் போகிறவர்கள்.
பசி ஆக்ரோஷ்மாய் அலற தொடங்கியதால் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சின்ன ஓட்டலில் சாப்பிட்டேன். ரூ.35 ஒரு சாப்பாடு.! ஷாக்தான் இருந்தாலும் வயிறு காயக்கூடாது. கொடுத்த காசுக்காகவாவது சாப்பிட வேண்டும் என்ற கொள்கை கொண்ட்தால் ருசியை ஓரம் கட்டி விட்டு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டினேன். அதற்குள் இரண்டு டவுன் பஸ் சென்றுவிட்ட்து.
அடுத்து வந்த்து சிற்றுந்து.
அதில் ஏறிய பின்பும் கூட்டம் அவ்வளவாக சேரவில்லை. கொஞ்சம் நேரம் கழித்துதான் வண்டி எடுத்தார்கள்.
பஸ் ஸ்டாண்டை அடைந்த்தும் கீழிறங்கி பார்த்தால் எந்த பேருந்திலும் ’திருநள்ளார்’ என்று போடவில்லை, காரைக்கால் போகும் பஸ்ஸையும் காணவில்லை.
பிறகு அங்கிருந்த போலீஸ்காரரிடம் வழி கேட்டபின் சொன்னார், ’அதுக்கு அந்த பக்கம் போங்க..’
சிறு தெரு வழியாக இன்னொரு பஸ் ஸ்டாண்டுக்கு போக வேண்டி இருந்த்து.
வழியில் கத்திரிக்காய், காரட் மற்றும் சில பச்சை காய்கறிகள் கூர் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள்.
காரைக்கால் போக இரண்டு வழிகள் ஒன்று – திருநள்ளாறு வழி – சுருக்க செல்லும் வழி. இரண்டு – திருகடையூர் செல்லும் வழி – கொஞ்சம் சுற்று.
அப்படியும் ஒரு மணி நேரம் ஆயிற்று திருநள்ளாரு செல்ல..
சன்னதி தெருவில் இருக்கும் கல்யாண மண்டபத்தை அடைந்து.. வந்த இடம் சரிதானா என்று விசாரித்து வைத்துவிட்டு. நேரே கோவிலுக்கு சென்று சனீஸ்வர பகவானை தரிசிக்க சென்றேன் என் பெற்றோருடன்..
பணம்...பணம்... இங்கென்று இல்லை.. எங்கு போனாலும்.. எந்த கோவிலுக்கு போனாலும் மக்கள் பக்தர்களை(!) பார்ப்பது அருளால் அல்ல பொருளால்.!
பாவம் சனீஸ்வரர் .. அவரை வில்லனாக்கி பாக்கறாங்க நம்ப மக்கள்.. நமக்கு கஷ்டம் வரும் நேரத்தில் அவர் நம்ப கஷ்ட்த்தை மட்டு படுத்தறார்.. ஆனா அத நாம நம்பள கஷ்டபடுத்தறார்னு புரிஞ்சிகிட்டு கதை கட்டி விட்டுட்டோம்.
நளதீர்த்தம் பல கோடி செலவு செய்து சீரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இப்போ அது இயங்கவில்லை.(!)
பிரம்ம தீர்த்த்த்தில் நிறைய பேர் குளித்துவிட்டு தாங்கள் உடுத்தி இருந்த ஏதாவது பழைய துணியை அதில் (அந்த குளத்தில்) போட்டு விட்டு செல்கிறார்கள். அருகிலே நிறைய ஷாஷே ஷம்பு மற்றும் எண்ணை பாக்கெட்டுகள் கிடைக்கிறது.. குளமும் வழுக்கு வழுக்கென்று வழுக்கிறது.
எல்லாவற்றையும் பார்த்தோம் வந்தோம். அவ்ளோதான்.
இது போன்ற கோவில் ஊர்களில் அரசாங்கத்தால் ஏற்படுத்தப் பட்ட பல அடிப்படை வசதிகள் இல்லை என்றாலும். தனியார் rooms available board நிறைய பார்க்க முடிகிறது. விலை விசாரிக்கவில்லை.
State Bank ATM, INDIAN Overseas Bank ATM இருக்கு.
எங்கள் குடுமப் நண்பர் மகன் திருமணத்திற்குதான் போயிருந்தோம்.. விமர்சையாக கல்யாணம் நடந்த்து.
காரைக்கால் 4 கிலோமீட்டர்தான். ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினோம். 5 ரூபாய் ஒரு ஆளுக்கு ஜுலை மாதம் முதல். 10 நிமிடம் போய் சேர்ந்தோம்.
புளி மூட்டையை விட அதிகமாகவே மக்கள் அடைபட்டுக் கொண்டார்கள் ஷேர் ஆட்டோவில்.
பஸ் ஸ்டாண்ட் வரை செல்லாமல் கோவிலுக்கு என்று சொல்லி முன்பாகவே இறங்கிக் கொண்டோம்.
பிரஞ்சு காலணியின் கீழ் இருந்த்தால் எல்லா வீதிகளும் நேர் கோட்டில் இருந்த்து. 3 மெயின் ரோடு கொண்டததுதான் காரைக்கால்.
ஒரு சிவன் கோவில், ஒரு விஷ்ணு கோவில், காரைக்கால் அம்மையார் ஆலையம்.
மாங்கனி இறைத்தல் விழா இன்னும் சில தினங்களில் நடை பெற இருப்பதால், பந்தல் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
காரைக்கால் அம்மையார் ஆலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் பேருந்து நிலையம். திருக்கடையூர் பேருந்து பிடித்து வந்தடைந்தோம்.
கல்யாணத்திற்காகவே கட்டிய கோவில் போல் இருக்கிறது.
கல்யாணம் ஆனவர்களும், கல்யாணம் செஞ்சுக்க போறவங்களும், நிறைய பேர் கழுத்தில் மாலையுடன் கோவிலில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள்.
ஞாயிற்று கிழமை ஆகையால் கூட்டம் கூட்டம் செம்ம கூட்டம்..
கும்பாஷேகம் – இப்படி ஒரு ஹோட்டல் பெயர்.
கல் மண்டபம் ஆகையால் உள்ளே நுழைந்த சில நேரத்தில் வியர்வை நீரூற்றாக வழிந்த்து. கோவில் ப்ராகாரம் நெடுக்க கல்யாணக் கோஷ்டிகள்.
காமிரா அனுமதி இல்லை போர்டு கவனிப்பாரற்று தொங்கிக் கொண்டிருந்த்து. மெய்யாகவே அதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. கையில் வித விதமான் வீடியோ மற்றும் டிஜிடல் காமிராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
தரிசனம் முடிந்து.. கோவிலை விட்டு வெளியே வந்தவுடன்.. சென்னை செல்லும் பேருந்து வந்து கொண்டிருந்த்து வேளாங்கன்னியிலிருந்து.. கை காட்டி நிறுத்து ஏறிக் கொண்டோம். 1.10 மதியம்..
சென்னை அடைந்தோம் 8.10க்கு.. ECR road வழியாக வந்தடைந்தோம்..
கிண்டி வந்தடைய 9.25 மணியானது.

Sunday, July 10, 2011

குழப்பும் எண்ணம்.. எழுத்து.. மனம்.

பொட்டி முன் தட்டிக் கொண்டிருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. கைவிட்டாச்சு !
தேடும் தேடல் தொடர்ந்தாலும் பாவம் ஏனோ அது கிடைக்கவில்லை..!
கிடைக்கும் என்றோர் நம்பிக்கையில் கிடைக்காமல் போனால் கவலை கூட வர மறுக்கிறது.!
இந்நிலை தொடர்ந்தால் ...?
குழப்பும் நெஞ்சில் குழப்பம் இருக்கிறது
அது அழுத்தி அழுத்தம் தருகிறது..
வலியும் வருகிறது..
வந்தால் பயமும் வருகிறது..
போனால் போகட்டும் போடா என்று விடவும் முடியவில்லை
தத்தி பேசும் தத்துவம் வந்தாலும் உறுதியாய் நம்ப உண்மை இடம் தரவில்லை..
எது உண்மை என்றும் தெரியவில்லை .. குழப்பம் தொடர்கிறது..

ஒன்றும் புரியவில்லை..
மனதின் அலைகளுக்கு ஓர் உருவமில்லை.. அதற்கு அர்த்தமும் இல்லை அது போலதான் இந்த எழுத்துகளும்.