Saturday, October 11, 2008

கடவுளுக்கு நன்றி

பனி பெய்த காலை வேளை கண்டு களிக்க..
பணி செய்ய காலை வேளை எழ செய்து..
வாழ்கை தோனியை துடுப்புடன் துடிப்பாக செலுத்த..
வாழ்வின் வாழ்வை சுவையை சுவைக்க..
அழும்போது அழவைத்து ..
சிரிக்கும்போது சிரிக்க வைத்து..
சில்லென்ற குளிரை உணர வைத்து..
கொஞ்சம் வலி கொடுத்து..
மிச்ச சுகம் கொடுத்து..
வலியால் சுகத்தை உணர வைத்து..
ஒலியை செவியில் விட்டு..
சுவையை நாவில் விட்டு..
ஒளியை கண்ணில் விட்டு..
அன்பை மனதில் வைத்து..
அந்த அகத்தை தினம் அவனை(ளை) தேட வைத்த
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

Tuesday, August 5, 2008

தெரு மட்டை விளையாட்டு..

அட கிரிக்கெடதான் இவ்ளோ ரத்தன சுருக்கமா சொல்லியிருக்கேன்..
இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமாவே வீட்ட பார்த்து வந்துட்டேன்.. ஆபீஸ்ல சேர (Chair) தேச்சது போதும்னுட்டு ஜூட் விட்டு வந்தவுடன் நெட மேஞ்சுகிட்டு இருந்தப்ப இப்படி ஒரு விபரீத மற்றும் அறிவுப்பூர்வமா ஒரு சந்தேகம் வந்துச்சு .. சரி விக்கிபீடியா போனா அழகா, அருமையா விளக்கம் சொல்லி இருக்காங்க.. க்ளிக்கிப் பாருங்க..
தெரு மட்டை விளையாட்டு
எனக்கு மனசுல எதையும் வச்சுக்க தெரியாது .. அதனால தோனினத அப்படியே பதிவுல போட்டேன்..