Monday, October 19, 2009

தீபாவளி 2009 - 1

போன வருடம் செலவு செஞ்சது கொசுவர்த்தி சுருள் போல என் மண்டைக்குள் வந்து சென்றது. எப்படி எல்லா பொருள் விலையும் இப்படி டபுள் டபுளா விலை ஏறிடிச்சு?ன்னு.. இது ஒரு தனிமனித பிரச்சனை இல்லை ஒரு சமுதாய பிரச்சனைன்னு ஒரு அசிரீரி சுளீர்னு அறைஞ்ச மாதிரி பட்டுச்சு...
இதெல்லாம் என் பசங்களுக்கு எங்க புரியபோகுது. இன்னும் அதிகமா பட்டாசு வங்கிருக்கலாம்னு குறைப்பட்டுக்கிட்டாங்க. அவனவன் கவலை அவனவனுக்கு..!
இந்த வருடம் இந்தியாவில் இல்லாததால்(!) பட்டாசு இல்லாத தீபாவளியாதான் இருந்தது. பட்ஷ்ணம்.. பலகாரம்.. எல்லாமே ஏட்டுல இருக்கிற ரெஸிப்பியாதான் போச்சு.. காலையில் எழுந்து கங்கா ஸ்னானம் ஆச்சான்னு கேக்க ஆளில்லை. போன்ல யாரோ கேட்டங்க.. தூக்க கலக்கத்துல அதுவும் தெரியல கேட்ட எல்லாத்துக்கும் Objective type பதில்தான் ஆம்/இல்லை சொல்லிட்டு போனை வச்சுட்டு திரும்பவும் தூக்கம்.

தீபாவளி இனிதே நிறைவடைந்தது.

இப்படி சொல்லி இத்தோடு முடிச்சிக்கிறேன்.

அடுத்த மடலில்...

No comments: