Saturday, October 11, 2008

கடவுளுக்கு நன்றி

பனி பெய்த காலை வேளை கண்டு களிக்க..
பணி செய்ய காலை வேளை எழ செய்து..
வாழ்கை தோனியை துடுப்புடன் துடிப்பாக செலுத்த..
வாழ்வின் வாழ்வை சுவையை சுவைக்க..
அழும்போது அழவைத்து ..
சிரிக்கும்போது சிரிக்க வைத்து..
சில்லென்ற குளிரை உணர வைத்து..
கொஞ்சம் வலி கொடுத்து..
மிச்ச சுகம் கொடுத்து..
வலியால் சுகத்தை உணர வைத்து..
ஒலியை செவியில் விட்டு..
சுவையை நாவில் விட்டு..
ஒளியை கண்ணில் விட்டு..
அன்பை மனதில் வைத்து..
அந்த அகத்தை தினம் அவனை(ளை) தேட வைத்த
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

1 comment:

இக்பால் said...

இக்கவிதையை படிக்கும்போது என்னால் அதன் சுகத்தை உணரமுடிகிறது.

அருமை.