Thursday, May 31, 2012

புதிய மின் கட்டண முறை

புதிய மின் கட்டண முறையில், வீட்டு இணைப்பு நுகர்வோர் குழப்பமின்றி கட்டணம் செலுத்துவதற்கான விவரங்களை, தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.




குழப்பம்:புதிய மின் கட்டண முறைகளை, தமிழக அரசு, ஏப்ரல் முதல் அமல்படுத்தியுள்ளது. இதில் வீடுகளுக்கான கட்டணம், பலவித அடுக்கு முறைகளை கொண்டுள்ளதால், எத்தனை யூனிட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் என, நுகர்வோர் குழப்பமடைகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சென்னை மண்டல அமைப்பாளர் சுதர்சனம் மற்றும் காஞ்சி மாவட்டச் செயலர் வரதராஜன் ஆகியோர், புதிய மின் கட்டண விவரங்களை, கையடக்க அட்டைகளாக அச்சடித்து, மின் நுகர்வோருக்கு இலவசமாக வழங்குகின்றனர்.



கட்டண முறை:

வீடுகளுக்கான மின் கட்டண கணக்கீட்டு முறை குறித்து, அதில் கூறியிருப்பதாவது:நூறு யூனிட்கள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் வீதம், மின் கட்டணம் செலுத்த வேண்டும். 101 யூனிட்டுகளுக்கு மேல், 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 பைசா வீதம், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.இருநூறு யூனிட்டுகளுக்கு மேல், 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர், 30 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு 2 ரூபாய் வீதமும், 201வது யூனிட் முதல், ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.இதேபோல், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோர், 40 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும், 201வது யூனிட் முதல், 500வது யூனிட் வரை, யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதமும், 501வது யூனிட் முதல் ஒரு யூனிட்டுக்கு, 5 ரூபாய் 75 பைசா என கணக்கிட்டு, மின் கட்டணம் செலுத்த வேண்டும்.



யாருக்காவது இது புரிஞ்சா இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

நன்றி :தினமலர்

Friday, May 25, 2012

என்ன வித்தியாசம்..?

ஐடில வேலை செய்றவங்களுக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்?
நேரம் காலம் பார்க்காம பொட்டி தட்ட வேண்டும்..
மற்றவர்களுக்கு வேலை நேரத்தில் மட்டும் வேலை செய்தால் போதும்..

ஏசி அறை என்பதால் ஐடி வாசிகள் சிந்தும் வியர்வையும் வெளியில் தெரியாது
வீட்டிற்கு வந்த புது மணப்பெண்ணாய் யாரிடமும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி .. துப்பவும் முடியாமல் இவர்கள் தவிக்கும் தவிப்பு அளவிடமுடியாதது.
மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தை சொன்னாலும் மக்களுக்கு புரியும்..
ஐடி ஆள் .. ஆன் கால், விபின்னு சொன்னா யார் புரிஞ்சிக்குவாங்க.. ?

வீட்லையே கம்ப்யூட்டர்ல பாட்டு கேட்டுகிட்டு படம் பார்த்துகிட்டு இருக்கிறானுவன்னு சொல்லுவாங்க..
மக்களே இவங்க கஷ்டத்த மறைக்க இவுங்க செஞ்சிக்கிற ..... பூச்சு வேலை இது.. !

இதுல ஐடில வேலை பாக்கறவன வேண்டாம்னு .. கல்யாணம் செஞ்சுக்க பொண்ணுங்களும் இப்பெல்லாம் மறுக்கறாங்க..

ஒடுக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு.. இவுங்க கஷ்டபட்டு வந்தா..
சிலர் உங்களுக்கு என்ன ஐடில வேலை பாக்குறீங்கன்னு வயித்தெறிச்சலை கொட்டிக்கறாங்க
அடுத்த முறை ஐடி ஆள் யாரையாவது பார்த்தா கொஞ்ச இதெல்லாம் நினைச்சு பாருங்க..!