Friday, January 1, 2010

மரத்தின் மயக்கம்

வடுக்கள் விழுதுகளாய் ஆழ்மனதில் ஊன்றி ஊரிப் போனது. அதன் வேர்கள் விழி நீரைத் தேடி விரைந்து விரிந்தது. அதனால் ஏற்பட்ட வலியாலும் உளைச்சலாலும் மரத்தின் மனம் வேகத்தொடங்கியது. பழங்களும் இலைகளும் அதன் வெப்பத்தை உணர்ந்தன. பறவைகள் படபடத்து பறக்க தொடங்கியது பயத்தினால். இதனால் ஒரு வித ஏக்கத்துடனே உதிர்ந்தது நிலத்தில். நிலமும் ஏக்கத்தோடு விழுந்த சருகுகளின் பாரத்தை தாங்கமுடியாமல் தவித்தது. அந்த நேரத்தில் வானில் இருந்து வந்த மழைத்துளியின் குளிர்ச்சியால் இதம் கண்டது மரம். இருக்கும் வரை இலையாக இணைந்து இருக்கும், இல்லாது போனால் சருகாக உதிர்ந்து உரமாகும் நிலையை கண்டு மரத்திற்கு மனம் தெளிவானது. வானமும் வெளியானது. காற்றின் தழுவல் மரத்தை மயங்க வைத்தது. உள்ளம் குளிர்ந்தது.